போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
நாட்டில் ஹெரோய்ன் உட்பட நச்சுப் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்த ஒரு பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடெங்கிலும் பரந்து காணப்படுவதால் இவர்களின் ஊடாக போதைப்பொருள் பாவனை மேலும் தீவிரமடைந்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்கள் நாட்டின் ஒருசில பிரதேசங்களில் மாத்திரம் காணப்படுவதானது போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புனர்வாழ்வு நிலையத்தையேனும் அமைக்க வேண்டும்.
10 தானம் வழங்கும் நிகழ்வில் கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் மீது தாக்குதல்!
கண்டி சுதுஹும்பொல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் ருவன் குமார தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதுஹும்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கண்டி மாநகர சபை உறுப்பினர் இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

