Germany help for smile அமைப்பினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

51 0

20/01/2026. கிளிநொச்சிமாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகிய கோணாவில் கிராமத்தில் மிக வறுமைக்குட்பட்ட 75 மாணவர்களுக்குகற்றல் செயற்பாட்டிற்காக கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் ஜேர்மன்வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் help for smile அமைப்பினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் பொத்தகப்பை,கொப்பி, கணிதஉபகரணப்பெட்டி, பென்சில், பேனா, அழிரப்பர், என்பன வழங்கிவைக்கப்பட்டது. இவற்றை வழங்கிவைத்த ஜேர்மன்வாழ் தமிழ்மக்களுக்கும் அதனை செயற்படுத்திய help for smile அமைப்பினருக்கும் கோணாவில் பிரதேச மாணவர்களும் பெற்றோர்களும் முழுமனதுடன் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.