கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 37 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்குள்ளநிலையில் அவரின் இரண்டு பயணப் பொதிகளில், 8 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கிலோகிராம் 220 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட நபரையும் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

