அறையை விட்டு வெளியே வர பயப்படும் வயதான பெண்: பின்னணியில் சில இளம்பெண்கள்

9 0

சுவிட்சர்லாந்தில், வயதான பெண்மணி ஒருவரை சில இளம்பெண்கள் கொடூரமாக தாக்கியதைத் தொடர்ந்து, இப்போதும் தன் அறையை விட்டு வெளியே வரவே அந்தப் பெண்மணி பயப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வாழும் 92 வயதான பெண்ணொருவர் வீட்டுக்குள் நுழைந்த சில இளம்பெண்கள் அவரை கொடூரமாக தாக்கினார்கள்.

சில இளம்பெண்கள் அவரை அடித்து கீழே தள்ள, சிலர் அவரது வாய்க்குள் துணியைத் திணித்து, கத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருக்க, மற்றவர்கள் அவரது வீட்டை சூறையாடினார்கள்.பொலிசார் அந்தப் பெண்களை சீக்கிரமாகவே பிடித்துவிட்டார்கள். அவர்களில் சிலர் பதின்மவயதினர் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.

அவர்களில் ஒரு இளம்பெண் 15,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழ்ங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையிலும் அந்தப் பெண்மணி அதன் பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை.

அவர் தன் அறையை விட்டு வெளியே வரவே பயப்படுகிறாராம்!