இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோ (Yván Gil Pinto) இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விசேட தொலைபேசி உரையாடல் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

