முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

30 0

23/01/2026. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், உழவனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிக வறுமைக்கோட்டுக்குட்பட்ட 70(எழுபது) மாணவர்களுக்கு ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் புத்தகப்பை, கொப்பி, பேனா, பென்சில், கணித உபகரணப்பெட்டி பென்சில் சீவுளி, அழிப்பான் என்பன அடங்குகின்றன. இப்பேருதவியை வழங்கிய நிருத்திய நாட்டியாலயத்தினருக்கு உதவியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தங்களது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.