சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள்களை செலுத்திய வெளிநாட்டு பிரஜைகள் சிக்கினர்!

10 0

அஹங்கம பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள்களை செலுத்திய வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அஹங்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அஹங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 9 வெளிநாட்டு பிரஜைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், குறித்த வெளிநாட்டு பிரஜைகளிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 9 வெளிநாட்டு பிரஜைகளையும் காலி நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (23) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.