ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர – எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (22) ரமேஷ் பத்திரணவிடம் நியமனக் கடிதத்தை கையளித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

