2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக் கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு இன்று வியாழக்கிழமை (22) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது,சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை பராமரிப்பது சாத்தியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது.
அதன்படி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கப்படுவதாக நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

