கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து, 16.52 மில்லியன் ரூபாய் பெறுமதியான 165,200 மான்செஸ்டர் ரக சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவம் மற்றும் இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய கூட்டு சோதனையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

