கைக்குண்டு மீட்பு

18 0

வடமராட்சி, கிழக்கு ஆழியவளை பகுதியில் இருந்து யுத்த காலத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அப் பகுதியில் உள்ள பனங்கூடலிற்குள் காணப்பட்ட குறித்த கைக்குண்டை மருதங்கேணி பொலிஸார், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் உதவியுடன் வியாழக்கிழமை (22) அன்று மீட்டுள்ளனர்.