டிட்வாவில் புதைந்த வாகனங்களை மீட்க உதவவும்

22 0

நுவரெலியாவில் உள்ள ரேந்தபொல குடியிருப்பில், சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, சேற்றில் புதைந்த பல வாகனங்களை மீட்க உதவுமாறு வாகன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இரவு, தனது கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 08 பேர் உயிரிழந்ததாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன், ஒரு லாரி, ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் நிலச்சரிவில் காணாமல் போனதாகவும் பாதிக்கப்பட்ட யோகநாதன் ஆனந்த மூர்த்தி, கூறினார்.

சேற்றில் புதைந்திருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகவும், இந்த இரண்டு வாகனங்களும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனது வேன் மற்றும் மண்ணில் புதைந்திருந்த மற்றொரு லாரியை மீட்க உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் அவை பலனளிக்கவில்லை. அதிக அளவு பணம் செலவழித்த பிறகும் வாகனங்களை மீட்டெடுக்க முடியாததால், அவற்றை அகற்றவோ அல்லது விற்கவோ முடிவு செய்துள்ளதாக யோகநாதன் ஆனந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.