கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்!

21 0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் (Colombo Port City Economic Commission – CPCEC) திருத்தச் சட்டமூலத்தில் சான்றிதழில் கையொப்பமிட்டதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் திருத்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் முதன்மைச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் நோக்கம், வெளிநாட்டு வங்கி நடவடிக்கைகள் மற்றும் வரி தொடர்பான ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதும், முக்கிய வர்த்தகங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதும் ஆகும்.