15 வயது சிறுமி மாயம் ; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

28 0

கடந்த ஒரு மாத காலமாக காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பண்டாரகமை , வீரகெப்பெத்திபொல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 2025.12.19 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக பண்டாரகமை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள சிறுமியின் விபரங்கள் ;

பெயர் – கரநாயக்ககே ஹசதி திவெத்மி

வயது – 15

முகவரி – இல. 89/03/03, வீரகெப்பெத்திபொல மாவத்தை , பண்டாரகமை

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591681 அல்லது 038 – 2290222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.