வாகன விபத்தில் இருவர் படுகாயம்

41 0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியின்  மாவடிவேம்பு பிரதேசத்தில்  ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்து மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

இரு வாகனங்களும் சித்தாண்டி பிரதேசத்திலிருந்து  மாவடிவேம்பு  நோக்கி பயணித்துள்ளதுடன் ஓட்டுநர்கள் இருவரும் பொதுமக்களின் உதவியுடன் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.