இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

16 0

இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் 6 உப திட்டங்களில் ஒன்றான இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.03.04 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இத்திட்டத்தின் ஒப்பந்தகாரர்களின் பலவீனமான செயலாற்றுகை காரணமாக குறித்த ஒப்பந்தத்தை இரத்து செய்து, அத்திட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 விலைமனுக்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், இராஜகிரிய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.