சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!

118 0

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும்ரூபவ் தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 18.01.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் அரங்கம் நிறைந்த உறவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இப் பொங்கல் விழாவானது 13:00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் தமிழர் பண்பாட்டிற்கமைய பொங்கல் பொங்கி அனைவரும் உணவருந்திய பின்னர் 15:30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன், நிகழ்வுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இவ் விழாவில் எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், கவியரங்கம் போன்றவற்றுடன் காலத்தின் தேவைகருதிய சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.

தமிழர் திருநாள் 2026 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.