கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் போது கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் நடைபெறவிருக்கும் எதிர்வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் விசேட போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது.
கொழும்பு போக்குவரத்து பிரிவின்படி, போட்டிகள் நடைபெறும் நாட்களில் மைதானத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் நண்பகல் முதல் ஒவ்வொரு போட்டி முடியும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வீதிகள் மூடப்படாது எனவும், வழக்கமான வாகனப் போக்குவரத்திற்காக திறந்திருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசேட போக்குவரத்து திட்டத்திற்குட்படுத்தப்படும் வீதிகள்
• பிரதீபா மாவத்தை
• சத்தர்மா மாவத்தை
• ஜெயந்த வீரசேகர மாவத்தை
• கோயில் வீதி (கெத்தாராம மாவத்தை)
• அடி 100 வீதி
• போதிராஜா மாவத்தை
• வின்சென்ட் பெரேரா மாவத்தை
• பிரிட்டோ பாபபுல்லே வீதி
இந்நிலையில், இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று திங்கட்கிழமை (19) காலை நாட்டை வந்தடைந்தனர்.

