துப்பாக்கி மகசின்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது !

21 0

மினுவங்கொடை – மிரிஸ்வத்த பகுதியில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 18 மகசின்கள் மற்றும் 25 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.