கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை

31 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான வட்ட மேசை மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.

எமது திட்டத்திற்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது நான் வர்த்தக வரிகளை விதிக்கக்கூடும். தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து எங்களுக்குத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் பாதுகாப்பு முன்னுரிமை என்றும் இதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு தெரிவாகவே எப்போதும் இருக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.