சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டு
உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம் பயணித்த எம்.வி அகத் கப்பலுடன் சேர்த்து தம்மைத்தாமே ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 33ஆவது நினைவினை முன்னிட்டு 29வது தடவையாக நடைபெற்ற வளர்ந்தோருக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 10.01.2026 சனி அன்று சூரிச் மாநிலத்திலும், இளையோர் மற்றும் பெண்கள் சுற்றுப்போட்டிகளானது 11.01.2026 ஞாயிறு அன்று சூரிச், ஆர்கவ் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது பொதுச்சுடர்; ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கம், மலர்வணக்கத்தினைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியது.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இச் சுற்றுப்போட்டியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும்; கலந்து சிறப்பித்திருந்தனர். 9இ11இ13இ15இ17இ21இ30இ பெண்கள் மற்றும் வளர்ந்தோர் பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 78 அணிகள் போட்டியிட்டன. பெண்கள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இம்முறை அதிகளவிலான அணிகள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டிமுடிவுகள் உடனுக்குடன் எமது உத்தியோகபூர்வமான இணையத்தளமூடாக (றறற.ளவகயiகெழ.உh) நேரஞ்சல் செய்யப்பட்டது. போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த சம நேரத்தில் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இச்சுற்றுப் போட்டியினூடாக எமது இளைய தலைமுறையினருக்கு தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறோம்.
தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
15.01.2026



























































