ஆண்டின் முதல் மாதத்திலேயே கஷ்டப்படும் மக்கள்… காரணம் என்ன?

10 0

சுவிஸ் ஆய்வு ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் பெரும்பாலானோருக்கு பொருளாதார ரீதியில் கடினமான மாதமாக அமைந்துவிடுவதாக சுவிஸ் ஆய்வொன்று தெரிவிக்கிறது.Comparis என்னும் சுவிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் பெரும்பாலானோருக்கு பொருளாதார ரீதியில் கடினமான மாதமாக அமைந்துவிடுவது தெரியவந்துள்ளது.

மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஜனவரி மாதத்தில் மிகவும் கவனமாக பணத்தை செலவு செய்கிறார்கள். இது, ’January slump’ அழைக்கப்படுகிறது.

இப்படி மக்கள் கவனமாக செலவு செய்யக் காரணம், அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகம் செலவு செய்ததால் அல்ல!

வரிகள், காப்பீடு, போக்குவரத்துக்காக பாஸ் எடுத்தல் போன்ற விடயங்களே மக்கள் கவனமாக செலவு செய்யக் காரணம் ஆகும்.

குறிப்பாக, குறைவருவாய் கொண்ட 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களும், குடும்பங்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.