‘ஜனநாயகன்’ வெளியீட்டைப் பற்றி விஜய்யை விட முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவது ஏன்? – பாஜக

12 0

 ‘ஜனநாயகன்’ வெளியீட்டைப் பற்றி நடிகர் விஜய்யை விட, முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவது ஏன்? என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த காலத்தில் வெளியிடப்படாமல் தடை பட்டதற்கு காரணம், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட முடிவே. அதே போன்று விஜய்யை அரசியல் ரீதியாக, தவறாக இயக்கி வரும் சிலரின் சுயநல தேர்தல் அரசியலும் காரணம்.

இந்த உண்மையை அறிந்த, ‘ஜனநாயகன்’ படத்தின் கதாநாயகன் விஜய் மிகுந்த தெளிவுடன் கருத்து சொல்லாமல் அமைதியாக இருக்கும் பொழுது, மற்றவர்கள், தமிழக வாக்காளர்களை குழப்புவதற்காக, மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்வது கண்டனத்துக்குரியது.

அதேபோல், தேர்தல் வாக்குறுதி நடிகர் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பது போல் உண்மைகளை மறைத்து , திமுக காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சியினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படத் துறையினரை தூண்டிவிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை, வேண்டுமென்று தடுப்பது போல, திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை செய்து வருவது நியாயமா?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இத்திரைப்படத்தை பெரும் வணிகத்தை திட்டமிட்டு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டு, பெரும் லாபத்தை அடைவதற்காக, சென்சார் போர்டு சட்டத்திற்கு எதிரான முறையில் படம் ஆக்கப்பட்டுள்ள, சில சர்ச்சைக்குரிய காட்சிகளை வேண்டுமென்று நீக்க மறுத்ததன் காரணமாகவே, தற்போது திரைப்படம் வெளியிடப்படாத சூழ்நிலையில் உள்ளது.

‘ஜனநாயகன்’ படம் சென்சார் சட்ட விதிகளின்படி பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய U/A சர்டிபிகேட் வழங்கப்படுவதற்கு தகுதியற்ற திரைப்படம் என்று கருதப்படுவதால் சென்சார் சர்டிபிகேட், குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியாக கூறிவிட்டது.