கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் டொனால்டு ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, டொனால்டு ட்ரம்ப்பக்கான ஈரானின் நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், போராட்டக்காரர்கள் தரப்பில் 2,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

