ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

11 0

முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கெதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சியங்களை பெப்ரவரி 6ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று வியாழக்கிழமை (16) கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பெப்ரவரி 6ஆம் திகதி மேலதிக சாட்சியங்களை மீண்டும் அழைக்க உத்தரவிட்டுள்ளார்.