முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அழைப்பாணையை ஜூன் 9ஆம் திகதி அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, நெவில் வன்னியாராச்சியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முறைப்பாடு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க ஒரு திகதியை வழங்குமாறும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கை ஜூன் 9 ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டு, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

