பிரான்ஸ் அரசு, இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை எதிர்கொண்டு அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் Mercosur ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவந்தார்கள்.
ஆனால், அவை இரண்டுமே வெற்றிபெறாததால், பிரான்ஸ் அரசு தப்பிவிட்டது.
விடயம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியமும், அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பான Mercosur என்னும் அமைப்பும், விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
Mercosur ஒப்பந்தம் என்னும் அந்த ஒப்பந்தத்தின்கீழ், தென் அமெரிக்க உணவுப்பொருட்கள் எளிதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படமுடியும்.
ஆனால், அதற்கு பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
அந்த ஒப்பந்தம், மலிவான, ஐரோப்பிய ஒன்றிய உணவு மற்றும் சுற்றுச்சுழல் தரநிலைகளுக்கு ஏற்றவையாக இல்லாத உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட வழிவகை செய்யும், உள்ளூர் பொருட்களுக்கு நியாயமற்ற வகையில் போட்டி உருவாகிவிடும் என அவர்கள் கருதுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

