முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றினால் மீளப்பெற்றப்பட்டது.
விமல் வீரவன்ச, 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (14) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றில் தற்போது ஆஜராகியதை அடுத்து அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டது.

