சென்னை தீவுத் திடலில் 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று தொடங்கியது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த 49 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொன்விழா ஆண்டு ஆகும். எனவே, பொன்விழா கொண்டாட்ட பொருட்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசுத்துறை அரங்கங்களை அமைக்க ரூ.1.55 கோடி வழங்கியது.

