அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

14 0

அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது.

சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, இம்​மண்​டலங்​களில் தற்​காலிக​மாக பணிபுரிந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்​டங்​களை நடத்தி வந்தனர்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பணி​யின் போது 3 வேளை உணவு, குடி​யிருப்பு வசதி, மருத்​து​வக் காப்​பீடு உள்​ளிட்ட 7 அறி​விப்​பு​களை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார். அதன் பின்​னர், தூய்​மைப் பணி​யாளர்​கள் பலர் பணிக்கு திரும்​பிய நிலை​யில், ஒரு பிரி​வினர் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், அமைச்​சர் சேகர்​பாபு, தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் உழைப்​போர் உரிமை இயக்​கத்தை சேர்ந்த பாரதி ஆகியோ​ருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.