பிரெஞ்சுப் பிரபலம் ஒருவர் தன் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நிலையில், யாரோ மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரபலம்
கோர்சிக்கா அரசியல்வாதி, பிரிவினைவாத போராளி, கால்பந்து அணி மேலாளர் என பன்முகங்கள் கொண்டவர் அலைன் ஒர்சோனி (Alain Orsoni, 71).
நேற்று திங்கட்கிழமை, பிரெஞ்சு தீவான கோர்சிக்கா தீவிலுள்ள Vero என்னுமிடத்தில் ஒர்சோனியின் தாயின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஒர்சோனி அங்கு வந்திருந்தபோது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட நிலையில், நிலைகுலைந்து சரிந்த ஒர்சோனி உயிரிழந்துவிட்டார்.
யாரோ, தொலைவிலிருந்து அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒர்சோனி கொலை தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ஒர்சோனி, Corsican Movement for Self-Determination என்னும் பிரிவினைவாத அமைப்பைத் தலைமையேற்று நடத்தியவர் ஆவார்.
1980ஆம் ஆண்டு, பாரீஸிலுள்ள ஈரானிய தூதரகம் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஒர்சோனிக்கு, பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

