டிரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

16 0

ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது.
வெனிசுலாவில் ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கிறது. அமெரிக்காவுக்கு உள்ளே கூட இந்த போராட்டங்கள் நடக்கிறது. இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காக டிரம்ப், ஈரானுக்குள் நடக்கும் போராட்டங்கள் குறித்து மட்டும் பேசியுள்ளார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மாணவர் தலைவர் உமர் காலித் குறித்து, நியூயோர்க் மேயர் பேசியதற்கு, மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஏனெனில் இது உள்நாட்டு சமாச்சாரம், இதில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். அதேபோலவே தற்போது ஈரானும், எங்கள் நாட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், டிரம்ப் இதை கண்டுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில்தான், ஈரான் முக்கியமான ஸ்டேட்மெண்டை கொடுத்திருக்கிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த வெளிநாட்டு தூதர்களுக்கான மாநாட்டில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனாலும், முந்தைய போரை விடவும் அதிகமாக, போருக்குத் தயாராக இருக்கிறோம். நியாயமான, சம உரிமை மற்றும் பரஸ்பர மரியாதை கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.