கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய தம்பதியினர்

24 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில்15 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பில் வசிக்கும் திருமணமான தம்பதிகளான இருவரும் இன்று அதிகாலை 02.30 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.இதன்போது அவர்களிடமிருந்து வெளிநாட்டு “பிளாட்டினம்” சிகரெட்டுகளையும் 500 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.