தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளது.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதன்கிழமை (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது
இந்த விசேட கலந்துரையாடலில் ,பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த கயந்த கருணாதிலக, ஹர்ஷ டி சில்வா, திலிப் வெதஆராச்சி, சுஜித் சஞ்சய பெரேரா, ஜே.சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சத்துர கலப்பதி, சமிந்திரானி கிரியெல்ல,இம்ரான் மஹ்ரூப், கிங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்னாண்டோ, ரோஹினி கவிரத்ன,டபிள்யூ. எச். எம். தர்மசேன, ரஞ்சித் மத்தும பண்டார, முஜிபுர் ரஹ்மான், ஜகத் விதான, சுஜீவ சேனசிங்க,பி. ஆரியவன்ச, எஸ்.எம்.மரிக்கார்,தயாசிறி ஜயசேகர ஆகியோரும்
தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன்,புதிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த ரவி கருணாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க, அனுராத ஜயரத்ன, தமிழரசுக்கட்சியை சேர்ந்த ப . சத்தியலிங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம். எஸ். உதுமா லெப்பை ,எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நிசாம் காரியப்பர் ஆகியோரும் பொதுஜன பெரமுனவின் டி.வி.சானக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம். டி. எம். தாஹிர்,சர்வஜன பலயவை சேர்ந்த திலித் ஜயவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இதுதொடர்பில் ஆழமாக கலந்துரையாடிய பின்னரே கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார்.

