ஏரியில் விழுந்து விமானம் விபத்து

21 0

இலங்கையின் நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில், கடல் விமானம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக ஏரியில் இறங்க முயன்றபோது பலத்த காற்று காரணமாக தடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் விமானத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்த இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.