இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங், கிட்டத்தட்ட நான்கு வருட அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பின்னர் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படுவார், இது கொழும்பில் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக அவர் வகித்த பதவிக்காலத்தின் முடிவைக் குறிக்கிறது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடகச் செய்தியில்
கிட்டத்தட்ட நான்குவருட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சேவைக்குப்பிறகு இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலீசங் ஜனவரி மாதம் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச்செல்வார்.
கொழும்பில்அமெரிக்காவின்அதியுயர் இராஜதந்திரியாகப் பணியாற்றிய அவரது பதவிக் காலத்தின் நிறைவினை அது குறிக்கிறது.
“இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்.”எனக்கூறிய தூதுவர் சங், “முதலாவது நாளிலிருந்தே எமது பாதுகாப்புப்பங்காண்மைகளைப்பலப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் மற்றும் எமது இரு நாடுகளையும் வலிமையாக்கும் கல்வி மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல முடிவுகளை வழங்குகின்ற மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை ஆதரிக்கும் ஒரு உறவினைஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.” எனவும் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்த தூதுவர் சங்கின் பதவிக்காலமானது, 2023ஆம் ஆண்டில்அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு, 2024ஆம் ஆண்டில் அமெரிக்க பீஸ் கோர் தொண்டர்கள் இலங்கையில் மீண்டும் தமது சேவையினை ஆரம்பித்தது, மற்றும் ஃபுல்பிரைட் நிகழ்ச்சித் திட்டத்தின் 80ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களை உள்ளடக்கியிருந்தது. 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில்LEED Gold சான்றிதழ் வழங்கப்பட்ட புதிய வளாகத்திற்குதூதரகம் இடம் மாறியதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார்.அது இலங்கையில் நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாகும். அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக ஒரு நவீன பங்காண்மையினைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்கா கொண்டுள்ள கவனத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

