மட்டக்களப்புக்கான புதிய கடுகதி தொடருந்து சேவை:விசேட அறிவிப்பு

22 0

புலத்திசி கடுகதி தொடருந்து , 9 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் இந்த தொடருந்து எதிர்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் எண்: 6075: கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் – மதியம் 12.45 மட்டக்களப்பை அடையும் நேரம் – இரவு 8.07.

ரயில் எண்: 6076:  மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம் – அதிகாலை 4.00 கொழும்பு கோட்டையை வந்தடைதல் – காலை 11.30

அதேபோல, எல்ல ஒடிஸி சுற்றுலா தொடருந்து, இன்று (07 ஆம் திகதி) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அம்பேவலையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

ரயில் எண்: 1043:  அம்பேவலையில் மதியம் 1.30 மணிக்குப் புறப்படும்

பதுளைக்கு மாலை 4.15 மணிக்கு வந்து சேரும்.

ரயில் எண்: 1044:  பதுளையில் காலை 7.45 மணி

அம்பேவலைக்கு காலை 10.58 மணிக்கு வந்து சேரும்.