இந்ந நபரை கண்டால் உடன் பொலிஸாருக்கு அறிவியுங்கள்..

20 0

கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்ய உதவுமாறு பொது மக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய உதவுமாறு வடக்கு களுத்துறை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி, சந்தேக நபர் தான் வேலை செய்து கொண்டிருந்த கல் குவாரியின் உரிமையாளர் மற்றும் மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கிய நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

கொலையாளியை தேடும் பொலிஸார்

காயமடைந்தவர்கள் களுத்துறை, நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார்.

இந்ந நபரை கண்டால் உடன் பொலிஸாருக்கு அறிவியுங்கள்...! தலைமறைவாகியுள்ள நபர் | Police Seek Public Support To Find A Suspect

தியகமவைச் சேர்ந்த 35 வயதான ஏ.எம். தனஞ்சய பிரியதர்ஷன என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான ருவான் தில்ஹான் பண்டாரா என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர் நாகொல்லஹேன, உடைங்குருவத்த, இங்குராவத்தையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.