’’திஸ்ஸ விகாரையை இனவாதமாக்க முயற்சி’

27 0

திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2025.11.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் அவசரகால சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் அவசரகால சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதுகள் இடம்பெற்றுள்ளது என்று எவராலும் குறிப்பிட முடியுமா, அனர்த்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.