ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சூறாவளி 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும்!

27 0

சூறாவளி காற்று 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் ராமேசுவரம் மாவட்ட மீனவர்கள் நாளை (ஜன.7) முதல் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாக் நீரிணை கடற்பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகப்பட்சமாக 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்றும், கடல் அலை 3.0 மீட்டர் வரையிலும் எழக் கூடும் என்பதால் பாக் நீரிணை கடற்பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாக் நீரிணை கடற்பகுதியில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தேவிபட்டினம், தொண்டி, எஸ்.பி பட்டினம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து நாளை (புதன்கிழமை) கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது, என மீன்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.