மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த ஒருவர் திங்கட்கிழமை ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத சகிப்பு விற்பனை இடம் பெற்று வந்த நிலையில் , கிராம மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

