முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

16 0

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (04)  உத்தரவிட்டுள்ளது.

2011 முதல் 2021 வரை லங்கா சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராகப் பணியாற்றிய சந்தேக நபர், காலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மறைந்திருந்தபோது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்