வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 27 வயதுடைய இலங்கை தனியார் விமான நிறுவன பணிப்பெண் எனவும் தெரியவந்துள்ளது.இவர் தனது சூட்கேஸில் 45.9 மில்லியன் மதிப்புள்ள 01 கிலோகிராம் 163 கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

