தங்க நகைகள் , தங்க பிஸ்கட்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ரூ. 46 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள தங்க நகைகள் , தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, குறித்த நபர் தங்கப் பொருட்களை ஒரு பயணப் பையில் மறைத்து வைத்து, விமான ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்ட வெளியேறும் வழியாக வெளியேற முயன்றார்.
இதேவேளை விமான நிலைய சுங்க அதிகாரிகள், குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 163 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

