கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 93ஆம் கட்டைப் பகுதியில் இன்று(3.1.2026) அதிகாலையில் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
இதன் போது, பத்துக்கும் மேற்பட்ட தென்னம் மரங்களும், பல வாழை மரங்களும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக யானை குடியிருப்புக்குள் புகுந்ததால், மக்கள் பெரும் அச்சத்துடன் இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும், குறித்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், யானை மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் எனவும், மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

