ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திடீரென பதவி விலகினால், நாட்டை பாரமெடுக்க நாமல் ராஜபக்ஷ தயாராக இருப்பதாக முன்னாள் பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
புது வருடத்தை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,தொடர்ந்துரையாற்றுகையில்
தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப இந்த ஆண்டு தனது கட்சி முழு பலத்துடன் செயற்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே தற்போதைய ஜனாதிபதியும் பதவி விலக வேண்டியிருந்தால், எந்த தயக்கமும் இல்லாமல் நாட்டை பாரமெடுக்க நாமல் ராஜபக்ஷ தயாராக இருக்கிறார்.
ஒடி ஒளிந்து பயந்து செயற்ட வேண்டிய அவசியம் அவருக்கில்லை. நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

