’’குஷ்’’ஷூடன் இந்திய பிர​ஜை கைது

25 0

“குஷ்” போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை (02) அன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார். அந்த பெறுமதி ரூ. 34 மில்லியன் 19 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், இந்தியாவின் பெங்களூரில் வசிக்கும் 35 வயதானவர் ஆவார்.

வெள்ளிக்கிழமை (02) அன்று  காலை 11.00 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவர் தனது பயணப்பொதிகளில் 03 கிலோகிராம் 419 கிராம் “குஷ்” போதைப்பொருளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.