ரூ.500 பில்லியன் குறைநிரப்பு: வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

14 0

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (19) அன்று அங்கீகரிக்கப்பட்டது.

இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்பித்திருந்தார்.

அதற்கமைய, வௌ்ளிக்கிழமை (19) மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன்,  500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.