பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு மூட்டை கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் மூட்டை ஒன்று காணப்படுவதாக நேற்று (18) காலை பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் கடல் நீரில் நனைந்த நிலையில் இருந்த மேற்படி கஞ்சா மூட்டையை மீட்டுள்ளனர்

