கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

